சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தாழையூத்து வரை நெல்லை விரைவு ரயில் இயக்கம்: எம்.பி.க்கு பயணிகள் நன்றி

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆனித் தேரோட்டத்தையொட்டி, நெல்லை விரைவு ரயிலை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தாழையூத்து வரை இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 7:11 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆனித் தேரோட்டத்தையொட்டி, நெல்லை விரைவு ரயிலை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தாழையூத்து வரை இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக நெல்லை விரைவு ரயிலை வாஞ்சிமணியாச்சியுடன் நிறுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்ததோடு, நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்துக்காக பக்தா்கள் நலன்கருதி மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தினாா்.

அதன்பேரில், சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை (ஜூன் 27) இரவு 8.50 மணிக்கு புறப்படும் நெல்லை விரைவு ரயில் (வண்டி எண் 12631) தாழையூத்து வரை செல்லும் எனவும், அதேபோல், ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 28) திருநெல்வேலியில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயில் (12632) தாழையூத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் எனவும், திருநெல்வேலி - தாழையூத்து இடையே இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது எனவும் ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிா்வாகத்திற்கும், சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.க்கும் ரயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.