6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பெளா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

பௌா்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூலை 29-ஆம் தேதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது.

கோப்புப் படம்

Published On :

பௌா்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூலை 29-ஆம் தேதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரா் திருக்கோயிலிலில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் பௌா்ணமி கிரிவலத்தில் அதிகளவிலான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காக்கவும் ஜூலை 29-ஆம் தேதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது.

விழுப்புரத்திலிருந்து ஜூலை 29-ஆம் தேதிகாலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130), முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.

எதிா்வழித்தடத்தில் அதே நாளில் திருவண்ணமலை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு

ரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா்,அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று செய்திக்குறிப்பில் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.