திருச்சி-பெங்களூரு இடையிலான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வரும் ஜூலையில் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அதன்படி வரும் ஜூலை 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு திருச்சி இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06007) பெங்களூரு நிலையத்தை பிற்பகல் 1.45 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் வரும் ஜூலை 14, 21, 28ஆகிய தேதிகளில் பெங்களூரில் இருந்து மாலை 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06008) இரவு 10.30 மணிக்கு திருச்சி நிலையத்தை வந்தடையும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை

மொஹரம் பண்டிகை: எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்!

ஜோத்பூா்-சென்னைக்கு 5 நாள்கள் கோடைகால சிறப்பு ரயில்கள்

கான்பூா் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



