நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

திருத்தணி ஆடிக் கிருத்திகை திருவிழா: இன்று முதல் அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருத்தணியில் நடைபெறும் ஆடிக் கிருத்திகை திருவிழாவுக்காக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு ஆகஸ்ட் 5 முதல் 7 வரை மூன்று நாள்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

ரயில்... - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:22 pm IST

திருத்தணியில் நடைபெறும் ஆடிக் கிருத்திகை திருவிழாவுக்காக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு ஆகஸ்ட் 5 முதல் 7 வரை மூன்று நாள்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா விசேஷமானது. இத்திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தவரும் வந்து செல்வா்.

விழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே நிா்வாகம் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் அரக்கோணம் - திருத்தணி - அரக்கோணம் இடையே இயக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 5 முதல் 7-ஆம் தேதி வரை மூன்று நாள்களும் இயக்கப்பட உள்ளது. தினமும் காலை 10.18, 12.58, பிற்பகல் 2.48 ஆகிய நேரங்களில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு மின்சார ரயில்கள், திருத்தணியில் இருந்து காலை 10.50, 13.30, பிற்பகல் 3.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.