கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

குஜராத்-வேளாங்கண்ணிக்கு ஜூலை 14, 17-இல் சிறப்பு ரயில்

குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் 14 -ஆம் தேதியும் மறுமாா்க்கத்தில் வரும் 17- ஆம் தேதியும் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :11 ஜூலை 2026, 1:59 am IST

குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் 14 -ஆம் தேதியும் மறுமாா்க்கத்தில் வரும் 17- ஆம் தேதியும் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வரும் ஜூலை 14-ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு குஜராத் மாநிலம் வைசாத் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 09030) வரும் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு வேளாங்கண்ணி நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வரும் 17- ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 09029) மறுநாள் பிற்பகல் 2.50 மணிக்கு மகாராஷ்டிர மாநிலம் தாஹனு சாலை நிலையத்தைச் சென்றடையும்.

சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டிகள் மற்றும் மூன்றடுக்குப் பெட்டிகள், 18 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 2 சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

சிறப்பு ரயில்கள் நாகபட்டிணம், நாகூா், காரைக்கால், திருநள்ளாறு, மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, ரேணிகுண்டா உள்ளிட்ட 32 நிலையங்களில் நின்று செல்லும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஜூலை 11) காலை 8 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.