இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஓணம்: ஜூலை 13 முதல் மங்களூரு - எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜூலை 13 முதல் மங்களூரு எழும்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Train

ரயில் - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 2:14 am IST

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜூலை 13 முதல் மங்களூரு எழும்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஜூலை 13 முதல் ஆக.31-ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06126) மறுநாள் காலை 10.55 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06125) வரும் ஜூலை 14 முதல் செப்.1-ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் எழும்பூரிலிருந்து பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, கன்னூா்வ வழியாக மங்களூரு சென்றடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஜூலை 9) காலை 8 முதல் தொடங்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.