அடுத்தடுத்து 6 கடைகளில் திருட முயற்சி

அம்பத்தூரை அடுத்த பாடியில் அடுத்தடுத்து 6 கடைகளில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
Updated on
1 min read

அம்பத்தூரை அடுத்த பாடியில் அடுத்தடுத்து 6 கடைகளில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
சென்னை பாடியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் முக்கிய சாலையான சி.டி.எச். சாலையில் இடைவெளியில்லாத அளவுக்கு வரிசையாக நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. 
இதில், 24 மணிநேரமும் போக்குவரத்து நெரிசல் உள்ள பாடி தலைமை தபால்நிலையம் எதிரே தனியார் வணிகவளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் செல்லிடப்பேசி கடை, பேட்டரி கடை, துணிக் கடை என 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 
இங்கு புதன்கிழமை இரவு வரிசையாக 6 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். கடைகளில் பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்ம நபர்கள் கடையிலுள்ள பொருள்களை கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து, 6 கடைகளின் உரிமையாளர்களும் வியாழக்கிழமை காலை கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com