5 இடங்களில் இன்று 'அம்மா' திட்ட முகாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் 'அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.


திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் 'அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் நோக்கத்தில் வருவாய்த் திட்ட ம் என்ற 'அம்மா' திட்ட முகாம் வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்வு செய்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இவ்வாரத்திற்கான முகாம் ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற இருக்கிறது.
இந்த முகாம், குறிப்பிட்ட கிராமங்களில் அந்தந்த பகுதி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில், முதியோர் ஓய்வூதியம் உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னைகள், நிலம் சம்பந்தமான பிரச்னைகள் போன்றவை குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தகுதியானோருக்கு நலத்திட்ட உதவிகள் அன்றைய தினமே வழங்கப்படும்.
முகாம் நடைபெறும் இடங்கள்: பொன்னேரியில் அனுப்பம்பட்டு-2 கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகிலும், திருத்தணி-சிவாடா கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், ஊத்துக்கோட்டை-திம்ம பூபாலபுரம் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், கும்மிடிப்பூண்டி-வி.ஆத்துப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், திருவள்ளுர்-அல்லிக்குழி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலும் நடைபெற இருக்கிறது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...