தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ரூ. 2.14 லட்சம்  செல்லிடப்பேசிகள் திருட்டு

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த 80 செல்லிடப்பேசிகள், மின்கலன்

Updated On :22 அக்டோபர் 2018, 3:12 am

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த 80 செல்லிடப்பேசிகள், மின்கலன் உள்ளிட்ட ரூ. 2.14 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் பகுதியில் செல்லிடப்
பேசிகள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 
இந்நிறுவனத்தில் குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (21) உற்பத்திப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி வரையில் தயார் செய்யப்பட்ட 80 செல்லிடப்பேசிகள், 65 மின்கலன், 13 டிஸ்பிளே ஆகியவற்றை சிப்பமிட்டு, பாதுகாப்பாக வைத்திருந்தனராம். ஆனால், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை நிறுவனத்துக்கு வந்தபோது, அங்கு தயாராக வைத்திருந்த செல்லிடப்பேசிகள் அடங்கிய பார்சல் காணாமல் போயிருந்ததும், அவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் பாலாஜி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, செல்லிடப்பேசிகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.