குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

படிக்க விருப்பம் தெரிவித்த சிறுவனுக்கு உதவிய வட்டாட்சியர்..!

பள்ளியில் படிக்க விருப்பம் தெரிவித்து காவல் நிலையத்திற்கு வந்த சிறுவனை போலீஸார் அலைக்கழித்ததாகவும், இதை அறிந்த

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

பள்ளியில் படிக்க விருப்பம் தெரிவித்து காவல் நிலையத்திற்கு வந்த சிறுவனை போலீஸார் அலைக்கழித்ததாகவும், இதை அறிந்த வட்டாட்சியர் தமிழ்ச் செல்வன், சிறுவன் படிப்பதற்கு ஏற்பாடு செய்ததாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 
திருவள்ளூர் பூங்கா நகரைச் சேர்ந்த செல்வகுமாரின் மகன் சங்கர்(13). இவரது தாயார் லட்சுமி தையல் தொழிலாளியாக உள்ளார். குடும்பப் பிரச்னையால் தந்தை தனியாக பிரிந்த நிலையில், சங்கர் தாயாருடன் வசித்து வருகிறார். 
இந்நிலையில், ஏகாட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த சங்கரை அவரது தாயார் வேப்பம்பட்டில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கு வேலைக்கு அனுப்பி உள்ளார். படிக்க விரும்பிய சங்கர் வேலைக்குப் போக மறுத்ததால், தாயார் அவனை அடித்து துன்புறுத்தியும் உள்ளார்.
இது குறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால் பிரச்னை தீரும் என்றும், அதன் மூலம் மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம் என்ற நோக்கத்தில் சங்கர் போலீஸாரிடம் சென்றுள்ளார். இதற்கு அங்கிருந்த காவலர்கள் இது எங்கள் விவகார எல்லை எனக் கூறி, செவ்வாப்பேட்டைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களோ இது எங்கள் பகுதி இல்லையெனக் கூறி கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு அலைக்கழிப்புச் செய்துள்ளனர். 
படிக்க விருப்பம் தெரிவித்த மாணவனை போலீஸார் அலைக்கழிப்புச் செய்வதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் வருத்தம் அடைந்து, வட்டாட்சியர் தமிழ்செல்வனிடம் சங்கரை ஒப்படைத்தனர். 
அதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அந்த மாணவனுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்ததோடு, சேவாலயா பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் உறுதியளித்தார். தொடர்ந்து, வட்டாட்சியரின் உதவியினால் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செந்தில்குமாரிடம் சங்கரை ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.