ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் ரொக்கம்  திருட்டு

திருவள்ளூர் அருகே, ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் புகுந்து 100 சவரன் நகை மற்றும் ரூ.4.50 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

திருவள்ளூர் அருகே, ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் புகுந்து 100 சவரன் நகை மற்றும் ரூ.4.50 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.     
இதுகுறித்து மப்பேடு போலீஸார் கூறியதாவது: திருவள்ளூர் அருகே பன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஜான்பீட்டர்(45). இவருக்குச் சொந்தமாக விவசாயப் பண்ணைகள் உள்ளன. இவரது மனைவி எலிசபெத் ராணி தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில், ஜான் பீட்டர் வழக்கம் போல் புதன்கிழமை காலையில் தனது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியை அழைத்துச் சென்று பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு, அங்கிருந்து தனது காய்கறித் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். 
பின்னர் பிற்பகலில் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 100 சவரன் நகைகள் மற்றும் ரூ.4.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. 
இச்சம்பவம் குறித்து ஜான்பீட்டர் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, துணைக் கண்காணிப்பாளர் நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். 
தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனர். இதில் துப்பறியும் மோப்ப நாய் ராம்போ பேரம்பாக்கம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பாதி தூரம் ஓடி நின்றது. இதுகுறித்து மப்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
பகல் நேரத்தில், ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 100 சவரன் நகைகள் திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.