கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

முன்விரோதத்தில் இருவருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் கைது

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக 2 பேரை கத்தியால் வெட்டியது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :14 பிப்ரவரி 2019, 3:09 am IST


திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக 2 பேரை கத்தியால் வெட்டியது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசனின் மகன் தினேஷ்குமார்(20). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவினர் மகன் ஹரிகிருஷ்ணனுடன் (22)  கடை வீதிக்குச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (25) உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து தினேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரைத் தாக்கி, கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவரும் பலத்த காயம்அடைந்தனர்.
அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,   ஹரிகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுதொடர்பாக மணவாளநகர் காவல் நிலையத்தில் தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், சஞ்சீவிராமன், மணிபாரதி, பாரத், சிவசங்கரன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.