ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

அலுமினிய உருக்கு ஆலை முற்றுகை

செங்குன்றம் அருகே உள்ள அலுமினியம் உருக்கு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

Updated On :26 பிப்ரவரி 2019, 4:06 am IST


செங்குன்றம் அருகே உள்ள அலுமினியம் உருக்கு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 
 செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் தனியார் அலுமினிய உருக்கு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பழைய அலுமினியப் பொருள்களை வாங்கி வந்து உருக்கி, புதிய அலுமினிய கட்டிகளாக தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலையால் ஏற்படும் மாசு அருகில் உள்ள குடியிருப்புகளை பாழ்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.  
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர்  அலுமினிய உருக்கு ஆலையை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி, அந்த ஆலையை மூடுமாறு உரிமையாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆலை மூடப்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.