ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கல்லூரியில் பொறியியல் கருத்தரங்கு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில், 8-ஆவது தேசிய கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:46 am IST

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில், 8-ஆவது தேசிய கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, டி.ஜே.எஸ். கல்வி குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். 
கல்விக் குழுமத்தின் செயலர் டி.ஜே.ஆறுமுகம், கல்லூரி முதல்வர் பழனி, கல்லூரி நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயந்திர பொறியியல் துறைத் தலைவர் ஜெயவீரன் வரவேற்றார்.
கூட்டத்தில், மெட்ரோ போக்குவரத்துக் கழக பாதுகாப்பு மற்றும் பயிற்சிப் பிரிவு துணைப் பொது மேலாளர் எஸ்.ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து, 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை மலரை கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் வெளியிட்டார். 
பின்னர், வளாகத் தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை பெற்ற 68 மாணவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
 பின்னர், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி, இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் கண்காட்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு   பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 
தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தனியார் நிறுவன அதிகாரி கே.சம்பத் குமார், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.