டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

குண்டர் சட்டத்தில் ரௌடி கைது

செங்குன்றம் பகுதியில் ரௌடியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :15 ஜனவரி 2019, 3:32 am IST


செங்குன்றம் பகுதியில் ரௌடியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாதவரத்தை அடுத்த மணலி மாத்தூர் 3-ஆவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் செல்லா (எ) செல்வகுமார். 
இவர் மீது சோழவரம், செங்குன்றம், மாதவரம், புழல், மணலி, எம்.கே.பி.நகர், செம்பியம், சாத்தாங்காடு, அயன்புரம், ஆந்திர மாநிலம் விஜயநகரம் உள்ளிட்ட பகுதி காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, வழிப்பறி ஆகிய வழக்குகள் உள்ளன. 
இதனிடையே, செல்லாவின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த ரௌடி கஞ்சாமணி என்பவரை செல்லா கொலை செய்ய முயன்றதாக தெரிய வந்தது. 
இதையடுத்து, செல்லாவை செங்குன்றம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தார். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய புழல் சரக காவல் உதவி ஆணையர் எம்.வெங்கடேசன் பரிந்துரைத்தார். அதை ஏற்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செல்லாவை அச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, செல்லா குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.