எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தீயில் கருகி விழுந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

திருத்தணி-கோரமங்கலம் கிராமம் அருகே சாலையோரம் இருந்த நாவல்மரம் தீயில் எரிந்து, சாலையில் விழுந்ததால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2019, 3:25 am IST


திருத்தணி-கோரமங்கலம் கிராமம் அருகே சாலையோரம் இருந்த நாவல்மரம் தீயில் எரிந்து, சாலையில் விழுந்ததால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி, மேல் திருத்தணி, அகூர், நத்தம், கோரமங்கலம், வீரகநல்லூர், எரப்பநாயுடு கண்டிகை, கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை வழியாக சித்தூர், வேலூர், பள்ளிப்பட்டு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நெடுஞ்சாலைகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலமரம், அரசமரம், புங்கமரம், நாவல், வேம்பு, புளிய மரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் நடப்பட்டு நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோரமங்கலம் கிராமம் அருகே புதன்கிழமை நெடுஞ்சாலை ஓரமாக இருந்த குப்பையில் தீப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த நாவல் மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து மேல் பாகம் வரை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து வாகன ஓட்டிகள், திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் மரக்கிளை எரிந்து சாலையில் விழுந்தது. இதனால் அச்சாலையில் அரை மணி நேரத்துக்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.