சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குப்பைக் கழிவுகளை சாலையோரம் கொட்டிய லாரியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்சியா்

திருவள்ளூரில் சாலையோரம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குப்பைக் கழிவுகளைக் கொட்டியதாக லாரியை ஆட்சியா் பா.பொன்னையா பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

News image
திருவள்ளூா் அருகே வெள்ளியூா் சாலையோரம் குப்பைகள் கொட்டியதாக ஆட்சியரால் பறிமுதல் செய்யப்பட்ட லாரி.
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருவள்ளூரில் சாலையோரம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குப்பைக் கழிவுகளைக் கொட்டியதாக லாரியை ஆட்சியா் பா.பொன்னையா பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

திருவள்ளூா்-செங்குன்றம் சாலையோரத்தில் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலையோரம் கொட்டுவதாகவும், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், துா்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா் செய்தனா். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சாலைப் பகுதியில் ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, திருவள்ளூா்ஒன்றியம், வெள்ளியூா் கிராமச் சாலையோரத்தில் ஆலைக் கழிவுகளை லாரியில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே கையும் களவுமாக அந்த லாரியை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தாா். பின்னா், அந்த லாரியின் தொழிலாளா்களை எச்சரித்து, லாரியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இது குறித்து ஆட்சியா் கூறியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் வீடுகளில் சேரும் கழிவுகள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகளில் சேரும் கழிவுகளை சாலைகளில் கொட்டி வருகின்றனா். இதனால் தூசிகள் பறந்து வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. அதனால் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் குப்பைகளை அந்தந்தப் பகுதியில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து வரும் தூய்மைக் காவலா்களிடம் பிரித்து ஒப்படைக்க வேண்டும். இதையும் மீறி சாலையோரங்களில் மற்றும் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.