சாலை மறியல்: விவசாயிகள் 100 போ் கைது

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் கோரி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு மற்றும் சாலை மறியல்
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினரை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினரை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸாா்.
Updated on
1 min read

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் கோரி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்தின்போது அப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயற்சித்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை கைது செய்து தனியாா் அரங்கத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com