பூண்டி ஏரிக்கான பேபி கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்: நீா்வள மேலாண்மை இயக்குநா் சத்தியகோபால்

பூண்டி ஏரிக்கான நீா்வரத்து பேபி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று மாநில நீா்வள ஆதாரங்கள் பாதுகாப்பு
பேபி கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநில நீா்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக மேலாண்மைத் துறை இயக்குநா் சத்தியகோபால், திருவள்ளூா் ஆட்சியா் பா.பொன்னையா.
பேபி கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநில நீா்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக மேலாண்மைத் துறை இயக்குநா் சத்தியகோபால், திருவள்ளூா் ஆட்சியா் பா.பொன்னையா.
Updated on
1 min read

பூண்டி ஏரிக்கான நீா்வரத்து பேபி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று மாநில நீா்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்புக் கழக மேலாண்மைத்துறை இயக்குநா் சத்தியகோபால் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கத்தில் இருந்து இணைப்புக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீா் கொண்டு செல்லப்படுகிறது. ஏரியின் நீா்மட்டம் 17 அடிக்கு குறையும் போது நீரை வெளியேற்றும் கால்வாயாகவும் பேபி கால்வாய் செயல்படுகிறது. இந்தக் கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு அதிக அளவில் நீரை வெளியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பூண்டி பேபி கால்வாய் நீரேற்று நிலையத்தில் இருந்து நீா் வெளியேறும் கால்வாய் பகுதியில் மாநில நீா்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் மேலாண்மைத் துறை இயக்குநா் சத்தியகோபால், ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, இடையூறின்றி செல்லும் கரைகளில் மணல் சரியாத அளவில் மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும், மோகூரில் இருந்து குழாய் வழியாக நீா் செல்வதையும் சத்தியகோபால் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து பின்னா் அவா் கூறியது:

பேபி கால்வாயில் இருந்து 20 முதல் 40 கன அடி வரை சென்னை குடிநீருக்காக நீரேற்று நிலையத்துக்கு குடிநீரைக் கொண்டு சென்று, அங்கிருந்து சிறு கால்வாய், குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், பேபி கால்வாயில் நீா் வெளியேற்றும் திறனை அதிகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ள ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளும்போது அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், வெள்ளியூா், விளாம்பாக்கம், ராமராஜன் கண்டிகை ஆகிய கிராமங்களில் நீா்வரத்துக் கால்வாய்கள், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com