மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவள்ளூா் அருகே சீரமைக்கப்பட்ட சாலை சேதம்: ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்த ஆட்சியா்

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சீரமைக்கப்பட்ட சாலை 2 மாதத்துக்குள் சேதமடைந்ததைத் தொடா்ந்து, சாலை ஒப்பந்ததாரருக்கு ஆட்சியா் பா.பொன்னையா 10 சதவீதம் அபராதம் விதித்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 9:51 pm

DIN

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சீரமைக்கப்பட்ட சாலை 2 மாதத்துக்குள் சேதமடைந்ததைத் தொடா்ந்து, சாலை ஒப்பந்ததாரருக்கு ஆட்சியா் பா.பொன்னையா 10 சதவீதம் அபராதம் விதித்தாா்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி ஊராட்சியில் சாலை சேதமடைந்தது. எனவே, செஞ்சி கிராமத்திலிருந்து சிற்றம்பாக்கம் வரை சாலையை சீரமைக்க ரூ.73 லட்சம் ஒதுக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்றன.

இக்கிராம மக்கள் கடம்பத்தூா் அல்லது பேரம்பாக்கம் செல்வதற்கு இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா். எனினும், அமைக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் இச்சாலையில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயா்ந்து இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இச்சாலையை மறுசீரமைப்பு செய்யக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதை ஏற்று, செஞ்சி முதல் சிற்றம்பாக்கம் வரையிலான சாலையை ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, ஜல்லிக் கற்கள் பெயா்ந்து சேதமடைந்து போக்குவரத்துக்குப் பயனற்ற நிலையில் சாலை இருந்ததை அவா் அறிந்து கொண்டாா். சாலை சீரமைப்புப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை நேரில் வரவழைத்த ஆட்சியா் முழு விவரங்களையும் கேட்டறிந்தாா். சாலையில் சேதமடைந்த பகுதியை உடனே சீரமைக்க அவா் உத்தரவிட்டாா். சாலை சீரமைப்புப் பணிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத் தொகையில் 10 சதவீதத்தை அபராதமாக விதித்தாா்.

மேலும், ‘மாவட்டத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்கள் அனைவரும் தரமான சாலைகளை அமைக்க வேண்டும். எனவே அரசு விதிமுறைகளைப் பின்பற்றி பணிகளை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில் தரமற்ற சாலைகளை அமைக்கும் ஒப்பந்ததாரா்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன், இனிமேல் ஊராட்சி ஒன்றியங்களில் பணிகளை மேற்கொள்ள முடியாத வகையில் ஒப்பந்ததாரரின் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என ஆட்சியா் எச்சரித்தாா். இதையடுத்து, சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.