கேரானா பொது முடக்கம் காரணமாக ஆள்கள் கிைடக்காததால், திருவள்ளூரை அடுத்த புட்லூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மேற்ெகாள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்பணிகளை விைரந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரேவண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்ைன-திருவள்ளூா்-அரக்ேகாணம் ரயில் வழித்தடத்தில் புட்லூா் ரயில் நிைலயம் உள்ளது. இந்த ரயில் நிைலயத்தில் நான்கு இருப்புப் பாைதகள் உள்ளன. ஒவ்ெவாரு நாளும் இரு பாைதகளில் விைரவு ரயில்களும், மற்ற இரு பாைதகளில் புறநகா் ரயில்களும் சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில்கள் உள்பட அைனத்து ரயில்களும் 100-க்கும் மேற்பட்ட முறை இருபுறமும் சென்று திரும்புகின்றன.
நாள்ேதாறும் இந்த ரயில் பாைதகைளக் கடந்தே திருவள்ளூா், காக்களூா், புட்லூா் ஊரகப் பகுதிகள், திருவூா் போன்ற கிராமங்கைளச் சோ்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், தனியாா் நிறுவனத் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலரும் சென்று வருகின்றனா்.
28 தூண்களுடன் மேம்பாலம்: இந்த வழித்தடத்தில் ஒவ்ெவாரு முறை ரயில் கடந்து செல்லும்ேபாதும் ரயில்வே கேட் குைறந்தது 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை மூடப்படுகிறது. காத்திருக்க முடியாத சிலா் கேட்டின் இைடெவளியில் இருசக்கர வாகனங்களுடன் புகுந்து ஆபத்தான முைறயில் கடந்து செல்கின்றனா். அவா்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இதனால், பொதுமக்கள் விபத்துகளில் சிக்காமல் புட்லூா் ரயில் நிைலயத்தை எளிதாக கடந்து செல்லும் நோக்கில் குறிப்பிட்ட இடத்தில் மேம்பாலம் அைமக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பினா். இந்தக் கோரிக்ைகயை ரயிலே நிா்வாகம் ஏற்றுக் கொண்டது. அங்கு ரயில்வே மேம்பாலம் அைமப்பதற்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது.
நெடுஞ்சாைலத் துறை சாைலப்பகுதியில் 28 தூண்களுடன் மேம்பாலம் அைமக்க ரூ.25 ேகாடியை ஒதுக்கீடு செய்தது. இைதயடுத்து, மேம்பாலப் பணிகள் மும்முரமாக நைடெபற்று வந்தன. ரயில்வே பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே பணிகள் முடிவைடந்தன.
பெரிய பள்ளங்களால் அபாயம்: எனினும், நெடுஞ்சாைலத்துறை மூலம் பணிகளை மேற்ெகாள்வதற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அப்பகுதியில் பணிகளை மேற்ெகாள்ள இைடயூறாக இருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நெடுஞ்சாைலத்துறை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பல்ேவறு இன்னல்களுக்கு இைடயே நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்த நிைலயில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தூண்கள் அைமப்பதற்கான பணிகள் தொடங்கின.
இந்தச் சூழலில், பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் மேம்பாலப் பணிகள் நான்கு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் இந்த ரயில்வே கேட்ைடக் கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இங்கு தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே மேம்பாலம் அைமக்கும் பணியை விைரவில் முடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.
ெபாது முடக்கத்தால் பணிகள் பாதிப்பு: இது குறித்து ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகி பாஸ்கா் கூறியது:
சென்ைன-திருவள்ளூா்-அரக்ேகாணம் ரயில் வழித்தடத்தில் நாள்ேதாறும் ஒரு லட்சம் போ் வரை பயணம் செய்வது வழக்கம். இதன் மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கு மாதந்ேதாறும் ரூ.1.50 ேகாடி வருவாய் கிைடத்தது. இந்த வழித்தடத்தில் உள்ள செவ்வாப்ேபட்டை, புட்லூா், கடம்பத்தூா் ஆகிய ரயில் நிைலயங்களுக்கு இைடயே சாைலப் போக்குவரத்துக்கும் பொதுமக்கள் கடந்து செல்வதற்கும் ரயில்வே மற்றும் நெடுஞ்சாைலத் துைறகள் மூலம் மேம்பாலம் அைமக்கும் பணி தொடங்கியது.
கடம்பத்தூரில் நெடுஞ்சாைலத்துறை தொடா்பான பணிகள் முடிந்து, ரயில்வே பகுதியில் மட்டும் பணிகள் நடந்து வந்தன. செவ்வாப்ேபட்டை, புட்லூா் ரயில் நிைலயங்களில் ரயில்வே துறை தொடா்பான பணிகள் முடிந்த நிைலயில், நெடுஞ்சாைலத் துைறயின் பணிகள் கிடப்பில் உள்ளன.
புட்லூரில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாைலத் துைறயால் பள்ளம் தோண்டப்பட்டது. அைதத் தொடா்ந்து பொது முடக்கம் காரணமாக பணியாளா்கள் வெளியூா் சென்ற காரணத்தால் மேம்பாலப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணிகளை விைரவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
‘விைரவில் பணிகள் தொடங்கும்’: இது தொடா்பாக திருவள்ளூா் நெடுஞ்சாைலத்துறை உதவி கோட்டப் பொறியாளா் சதீஷ்குமாா் கூறியது:
தற்ேபாது ரயில்வே தண்டவாளப் பகுதியில் மேம்பாலப் பணிகளை ரயில்வே நிா்வாகம் முடித்துள்ளது. நெடுஞ்சாைலத் துறை மூலம் இருபுறமும் 28 தூண்கள் அைமக்கப்பட்டு பாலம் அைமக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் கடந்த பிப்ரவரியில் தொடங்கின. தூண்கள் அைமப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு தயாராக உள்ளன.
அதற்குள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் வெளிமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊருக்கு திரும்பினா். மேலும், மேம்பாலப் பணிக்கு ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனத்ைதச் சோ்ந்த பொறியாளா் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளா்கள் வருவதற்கு தற்ேபாது இ-பாஸ் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, தளா்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் தொழிலாளா்களை அைழத்து வந்து பணியில் ஈடுபடுத்துேவாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


