தானியங்கி சிக்னல் கம்பம் மீது கன்டெய்னா் லாரி மோதி விபத்து
திருத்தணியில் மாநில நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி சிக்னல் கம்பத்தின் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், கம்பம் உடைந்து விழுந்தது.


திருத்தணி: திருத்தணியில் மாநில நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி சிக்னல் கம்பத்தின் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், கம்பம் உடைந்து விழுந்தது.
திருத்தணி நகராட்சியில், ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, சித்தூா் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் தினமும் செல்கின்றன. இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸாா் சாலையின் முக்கிய சந்திப்புகளில் தானியங்கி சிக்னல் அமைத்துப் பராமரித்து வருகின்றனா். ம.பொ.சி. சாலையில் இருந்து அரக்கோணம் மாநில நெடுஞ்சாலைக்கு திரும்பும் வளைவுப் பகுதியில் தானியங்கி சிக்னல் கம்பம் அமைத்து, அதில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தியுள்ளனா்.
இந்நிலையில், ம.பொ.சி. சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கண்டெய்னா் லாரி ஒன்று திரும்பியபோது, தானியங்கி சிக்னல் கம்பம் மீது மோதியது. இதில் சிக்னல் கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் கண்காணிப்பு கேமராவும் சிக்னல் கம்பமும் பழுதடைந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீஸாா் அங்கு சென்று, சாலையின் குறுக்கே விழுந்த சிக்னல் கம்பத்தை அகற்றி, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...