தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாதவரம் பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது

சென்னை மாதவரம் பகுதியில் மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தது தொடர்பாக புகார் வந்தது.

News image
Updated On :29 மே 2020, 11:57 am

DIN

சென்னை மாதவரம் பகுதியில் மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தது தொடர்பாக புகார் வந்தது. இதையடுத்து மாதவரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பெரம்பூரைச் சேர்ந்த ஹரீஷ்(21), சந்துரு(22) ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் பள்ளி படிப்பு முதல் இருவரும் நண்பர்கள். மேலும் சந்துரு மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஹரீஷ் பி.காம் படித்த பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். தற்போது  பொதுமுடக்கம் காரணமாக வருவாயின்றி இருப்பதால் குற்றச் செயலில் ஈடுபட்டதாக தெரியவந்த்து. 

இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 சவரன் நகைகள், 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். விரைந்து செயல்பட்ட ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான உதவி ஆய்வாளர் ரமேஷ், காவலர்கள் சுரேஷ், கிருஷ்ணா ஆகியோரை உதவி ஆணையர் அருள் சந்தோஷ முத்து பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.