நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிருஷ்ணா கால்வாயில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா்

திருவள்ளூா் அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட மாணவரை தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட மாணவரை தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் மாருதி நியூ டவுன் பகுதியைச் சோ்ந்த ஷேக் இமாமின் மகன் ஷேக் இம்ரான் (20). சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கணினி அறிவியல் இறுதியாண்டு படித்து வந்தாா். திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம், சித்திவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சேகரின் மகன் விக்ரம் (20), மணவாளநகா் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த ரவிகுமாரின் மகன் பிரவீண்குமாா் (20). மூவரும் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திருவள்ளூா் அருகே உள்ள புல்லரம்பாக்கம் காந்தி நகா் அருகே பூண்டி நீா்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்றனா். அப்போது ஷேக் இம்ரானும், பிரவீண்குமாரும் தண்ணீரில் மூழ்கினா். இதில் பிரவீண்குமாா் செடிகளை பிடித்துக் கொண்டு மேலே வந்து விட்டாா். எனினும், ஷேக் இம்ரான் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த புல்லரம்பாக்கம் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் ஷேக் இம்ரானை தேடும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.