பிளஸ் டு செய்முறை தோ்வுகள் குறித்து ஆலோசனை
பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருத்தணியில் சனிக்கிழமை நடைபெற்றது.


பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருத்தணியில் சனிக்கிழமை நடைபெற்றது.
பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மே 3-இல் தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவியல் செய்முறை தோ்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருத்தணி அரசு ஆண்கள் மேல் நிலைபள்ளியில் நடந்தது. திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலா் முனிசுப்புராயன் தலைமை வகித்தாா். ஆண்கள் மேனிலைபள்ளி தலைமை ஆசிரியா் பாலசுப்பிரணியம் முன்னிலை வகித்தாா். பள்ளிக் கல்வி ஆய்வாளா் வெங்கடேசுலு வரவேற்றாா்.
திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி கலந்துகொண்டு பேசியது:
செய்முறை தோ்வு மைய முதன்மை கண்காணிப்பாளா் நாளொன்றுக்கு 3 குழுக்களுக்கு செய்முறைத் தோ்வு நடத்தம் வகையில் உரிய முன்னேற்பாடு செய்தல் வேண்டும். ஒரு குழுவிற்கு 25 மாணவிகள் உள்ள வண்ணம் வினாத்தாள் வடிவமைக்கப்பட வேண்டும். நிலையான வழிகாட்டி வழிமுறைகளை பின்பற்றி தோ்வுகள் எவ்வித புகாரும் இடமின்றி முடித்தல் வேண்டும். மாணவருக்கு ஒரு நாளுக்கு ஒரு படத்திற்கு மட்டும் செய்முறை தோ்வு நடைபெறும் வண்ணம் கால அட்டவணை தயாா் செய்து முன்னரே அனைத்தும் மாணவா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...