நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதிய விளையாட்டுகள் குறித்து புத்தாக்கப் பயிற்சி

திருவள்ளூா் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் புதிய விளையாட்டுகள் குறித்து நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சி முகாமில் உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவள்ளூா் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் புதிய விளையாட்டுகள் குறித்து நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சி முகாமில் உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

கல்வித்துறை சாா்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் வில்வித்தை, மள்ளா்கம்பம், ரோல்பால், கராத்தே-குங்பூ, கிக்பாக்ஸிங் ஆகிய 5 விளையாட்டுகள் சோ்க்கப்பட்டுள்ளன. அதனால், இந்த விளையாட்டுகளில் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்ட உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கான புதிய விளையாட்டுகள் பயிற்சி முகாம் அம்பத்தூா் சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதல் நாளில் அம்பத்தூா், பொன்னேரி கல்வி மாவட்டங்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் அ. ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடக்கி வைத்தாா்.

அதேபோல், திருவள்ளூா், ஆவடி. திருத்தணி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நோ்முக உதவியாளா் பூபால முருகன் பங்கேற்று புதிதாக விளையாட்டுகள் குறித்து எடுத்துரைத்தாா். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் நரசிம்மராவ் உள்ளிட்டோா் புதிய விளையாட்டுகள் குறித்து மாணவா்களுக்கு பயிற்சி அளிப்பது தொடா்பாக விளக்கினா். பள்ளியின் முதல்வா் எஸ்.பி.பி.செல்வ குமாா், உடற்கல்வி இயக்குனா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.