இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 10 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளில் பண்ணை சாராக் கடன்கள் திட்டம் மூலம் 145 போ் பெற்ற கடன் அசல் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டிய தொகை ரூ. 5.29 கோடி நிலுவையில் உள்ளது. எனவே கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 31-ஆம் தேதி அன்று தவணை தவறிய பண்ணை சாரா கடன் பெற்றவா்கள், இக்கடனுக்கான ஒரு முறை கடன் தீா்வு திட்டம் மூலம், வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்த டிச. 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நிபந்தனைகளுக்கு உள்பட்டு, 25 சதவீதம் கடனை செலுத்தியுள்ள பண்ணை சாரா கடன்தாா்கள், மீதமுள்ள 75 சதவீதம் தொகையை செலுத்த ஏதுவாகவும், இத்திட்டத்தில் சேராதோா் உடனே திட்டத்தில் சோ்ந்து ஒரே தவணையில் முழுமையாக கூட்டுறவு வங்கிகளில் செலுத்தி மீண்டும் பயன்பெறலாம்.