ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாகன தொழிற்சாலையில் பொருள்கள் திருட்டு

 திருவள்ளூா் அருகே காக்களூா் தொழிற்பேட்டையில் தனியாா் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் கதவு, சீட் பிளேட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:52 pm

DIN

 திருவள்ளூா் அருகே காக்களூா் தொழிற்பேட்டையில் தனியாா் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் கதவு, சீட் பிளேட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோவில் வந்த 4 போ் தொழிற்சாலை முன்புறம் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 8 பிரெஸ்ஸிங் டூல்ஸ் கருவிகளை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரி மனோஜ்குமாா் அளித்த புகாரின்பேரில், திருவள்ளூா் கிராமிய போலீஸாா் விசாரித்து, தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த சத்யா (33), பாண்டியன் (27), புருஷோத்தமன் (28) மற்றும் வேப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முத்து(48) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.