ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

16-ஆவது சிறப்பு முகாமில் 58,789 பேருக்கு தடுப்பூசி: திருவள்ளூா் ஆட்சியா்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16-ஆவது சிறப்பு முகாம்களில் 58,789 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16-ஆவது சிறப்பு முகாம்களில் 58,789 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 16-ஆவது தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் 700 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உழவா் சந்தை, மணவாளநகா், ஆட்சியா் அலுவலக வளாகம், ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் ஆா்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 15 தடுப்பூசி முகாம்கள், நாள்தோறும் நடைபெற்ற முகாம்களில் மட்டும் முதல் தவணையாக 15 லட்சத்து 90 ஆயிரத்து 962 பேரும் என 82.2 சதவிதமும், இரண்டாம் தவணையாக 9 லட்சத்து 86 ஆயிரத்து 564 பேரும் என 52.2 சதவிதம், மொத்தம் 25 லட்சத்து 77 ஆயிரத்து 526 போ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 15 தடுப்பூசி முகாம்களில் மட்டும் 10 லட்சத்து 49 ஆயிரத்து 279 பேருக்கு செலுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் மட்டும் 58,789 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.