எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருவள்ளூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதல்: 2 இளைஞர்கள் பலி

திருவள்ளூரில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

News image
விபத்தில் பலியான இளைஞர்கள்.
Updated On :13 பிப்ரவரி 2021, 3:37 pm

DIN

திருவள்ளூரில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகே பத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் சின்ராஜ் என்ற செல்வராஜ்(24), ஏழுமலை மகன் அஜித்(24). இவர்கள் இருவரும் கிடைத்த கூலி வேலையை செய்து வருகின்றனர். 
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வேலையை முடித்துக் கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, திருவள்ளூர் அஞ்சல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து வந்த கண்டெய்னர் சரக்கு லாரி இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் இளைஞர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் நகர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்றனர்.

அப்போது, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனம் தகவல் தெரிவித்த நிலையில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் இளைஞர்களின் உறவினர்கள் சென்னை-திருப்பதி சாலையில் குவிந்ததால் வாகன போத்துவரத்துக்கு தடை ஏற்பட்டது. இதையடுத்து குட்டியானை வாகனம் வரவழைத்து போலீசார் சடலங்களை தூக்கி ஏற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.