வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேர்தல் அறிவிப்புக்கு 10 நிமிடம் முன் திறக்கப்பட்ட பூவலம்பேட்டில் அம்மா மினிகிளினிக்

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவலம்பேடு பகுதியில் அம்மா மினி கிளினிக் தமிழகத்தின் சட்டப்பேரவை தேதி அறிவிப்புக்கு 10 நிமிடம் முன் திறந்து வைக்கப்பட்டது.

News image
பூவலம்பேட்டில் திறக்கப்பட்ட அம்மா மினிகிளினிக்.
Updated On :26 பிப்ரவரி 2021, 1:31 pm

DIN

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவலம்பேடு பகுதியில் அம்மா மினி கிளினிக் தமிழகத்தின் சட்டப்பேரவை தேதி அறிவிப்புக்கு 10 நிமிடம் முன் திறந்து வைக்கப்பட்டது.

பூவலம்பேடு ஊராட்சி பகுதி அதிமுக நிர்வாகி கருணாகரன் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்த அம்மா மினிகிளினிக் திறப்பு விழாவிற்கு பூவலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக க கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவகுமார் பங்கேற்று மினி கிளினிக்கை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

இந்த மினி கிளினிக்கில் நோயாளிகள் காத்திருப்பு அறை, மருத்துவரின் சிகிச்சை அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம் மூன்று படுக்கை வசதிகள், மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த மினி கிளினிக்  காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும்  மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்பட உள்ளது.

இதில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் உள்ளிட்டோர் பணிபுரிய உள்ளனர். நிகழ்வில் பங்கேற்ற வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ்  மினி கிளினிக்  செயல்படும் விதம் குறித்து விளக்கினர். நிகழ்வில் அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் தன்ராஜ், இமாச்சலம், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி என்.சிவா, கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் புனிதவள்ளி வெங்கடாசலபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழா முடிவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசின் பரிசு பெட்டகத்தினை ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.