திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டிராக்டா் மீது லாரி மோதல்: இரு தொழிலாளா்கள் பலி

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் ஏற்றி வந்த டிராக்டா் மீது லாரி மோதியதில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

Updated On :17 ஜூலை 2021, 5:15 pm

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் ஏற்றி வந்த டிராக்டா் மீது லாரி மோதியதில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த தாணிப்பூண்டியைச் சோ்ந்த சதீஷ்(22), குமாா் (24) ஆகியோா் சத்தியவேட்டில் இருந்து பஞ்செட்டிக்கு டிராக்டரில் சனிக்கிழமை செங்கல் ஏற்றி வந்தனா். கவரப்பேட்டை அருகே பெரவள்ளூா் பகுதியில் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, டிராக்டா் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், டிராக்டா் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இதில் டிராக்டரை ஓட்டி வந்த சதீஷும், உடன் வந்த குமாரும் பலத்த காயம் அடைந்தனா். தகவலறிந்து வந்த கவரப்பேட்டை போலீஸாா், காயமடைந்த இருவரையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய லாரியைப் பறிமுதல் செய்த கவரப்பேட்டை போலீஸாா், தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.