தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருத்தணியில் தினமும் 2,000 பேருக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

கரோனா முழு ஊரடங்கையொட்டி தினமும், 2000 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் நாசர் இன்று துவக்கி வைத்தார்.

News image

உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் நாசர்.

Updated On :3 ஜூன் 2021, 11:38 am

DIN

கரோனா முழு ஊரடங்கையொட்டி தினமும், 2000 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் நாசர் இன்று துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஏழை மக்களின் பசியைப் போக்க, கரோனா காலத்தில் ஊரடங்கு முடியும் வரை தளபதி இலவச உணவகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று திருத்தணியில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி தலைமை வகித்தார்.  இதில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.,க்கள் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று தினமும், 2000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதுதவிர, மினி வேன் மூலம் திருத்தணி நகரம் முழுவதும் ஏழைகளுக்கு உணவு வழங்குவதையும் கொடி அசைத்து அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். இன்று முதல் நாளில், ஏழைகளுக்கு பிரிஞ்சி சாதம், தயிர்சாதம், மூக்கடலை சுண்டல், முட்டை மற்றும் ஒரு ஆப்பிள் ஆகியவை வழங்கப்பட்டது. ஊரடங்கு முடியும் வரை தினமும், 2000 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி தனது சொந்த செலவில் உணவு வழங்குவதாக அமைச்சரிடம் தெரிவித்தார். 

திருத்தணி நகர கழக பொறுப்பாளர் வினோத்குமார், வழக்கறிஞர் கிஷோர் ரெடி, முன்னாள் திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் மு. நாகன் நகர கழக பொறுப்புகுழு உறுப்பினர் ஜி.எஸ். கணேசன், வழக்கறிஞர் கிஷோர் ரெடி, திருத்தணி ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ஆர்த்தி ரவி உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.