திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றில் குதித்து மகளுடன் தாய் தற்கொலை?
தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் கொசஸ்தலை ஆற்றில் மகளுடன் குதித்து தாய் தற்கொலை செய்ய முயற்சித்ததாக தகவல் வெளியானதையடுத்து அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் கொசஸ்தலை ஆற்றில் மகளுடன் குதித்து தாய் தற்கொலை செய்ய முயற்சித்ததாக தகவல் வெளியானதையடுத்து அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நிரோஷா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கணவர் விஜயகுமார் இறந்த நிலையில் தர்ஷினி, வினிதா என இரு மகள்களுடன் வாழந்து வந்துள்ளார்.
இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மூத்த மகள் அவர்களது உறவினர் வீட்டில் இருந்த நிலையில் நேற்று மாலை நிரோஷா தமது இருசக்கர வாகனத்தில் இளைய மகள் தர்ஷினியுடன் தாமரைப்பாக்கம் அணைக்கட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திய நிரோஷா, மகள் வினிதாவுடன் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் நிரோஷா காணாமல் போனதால் உறவினர்கள் வெங்கல் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய தாய், மகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றில் தண்ணீரின் வேகமும் அதிகரித்துள்ளதால் தாய், மகள் இருவரும் வெகு தூரம் அடித்து செல்லப்பட்டனரா அல்லது சேற்றில் சிக்கியுள்ளாரா என தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடன் தொல்லை காரணமாக மகளுடன் சேர்ந்து தாய் ஆற்றில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...