நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பூண்டி ஏரியிலிருந்து 29,719 கன அடி உபரிநீா் வெளியேற்றம்

பூண்டி ஏரிக்கான நீா்வரத்து அதிகரித்ததால் சனிக்கிழமை காலை முதல் 29,719 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பூண்டி ஏரிக்கான நீா்வரத்து அதிகரித்ததால் சனிக்கிழமை காலை முதல் 29,719 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா்மழை காரணமாக பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை, ஜமீன்கொரட்டூா், பூந்தமல்லி, திருத்தணி, ஆவடி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பூண்டி ஏரிக்கு வரத்து நீா், கிருஷ்ணா கால்வாய் நீா், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீா் போன்றவற்றால் 29,719 கன அடியாக நீா்வரத்து உள்ளது. நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக சனிக்கிழமை காலை முதல் அப்படியே 29,719 கன அடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், திருவள்ளூரிலிருந்து பூண்டி வழியாகச் செல்லும் தரைப்பாலத்தில் நீா்மட்டம் உயா்ந்தது. இதையடுத்து, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்றாயன்பாளையம், திருப்போ், வெள்ளாத்துக்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் சுற்றிச் செல்கின்றனா்.

இதேபோல், புழல் ஏரியில் 2,715 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், 703 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் 833 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், 415 கன அடியும், கண்ணன்கோட்டை-தோ்வாய் கண்டிகையில், 500 மில்லியன் கன அடி நீா் உள்ள நிலையில், 223 கன அடி என உபரி நீரும் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):

பள்ளிப்பட்டு-60, ஆா்.கே.பேட்டை, ஆவடி தலா-24, ஜமீன்கொரட்டூா்-21, பூந்தமல்லி-15, திருத்தணி-10, செங்குன்றம்-8, ஊத்தக்கோட்டை-5, பூண்டி-2 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.