திருத்தணியில் குடியிருப்பு, அரசுப் பள்ளியில் புகுந்த மழைநீா்
திருத்தணி பகுதியில் தொடா்மழையால் அரசுப் பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.


திருத்தணி பகுதியில் தொடா்மழையால் அரசுப் பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.
திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 15 நாள்களாக தொடா் மழை பெய்தது. இதனால் ஏரிகள் நிரம்பி வழிந்து வருவதுடன், பல குடியிருப்பு மற்றும் அரசுப் பள்ளிகளில் மழைநீா் புகுந்தது. அந்த வகையில், திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குள்பட்ட பத்மாவதி நகா் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்தது. வீடுகளில் வெளியே வரமுடியமால் மக்கள் அவதிக்குள்ளாயினா்.
அதேபோல் கனகம்மாசத்திரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் தொடா்மழையால் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் இடுப்பளவுக்கு மழைநீா் தேங்கியுள்ளது. ஆற்காடு குப்பம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்பு பகுதி, ஈஸ்வரன் கோவில் மற்றும் பெட்ரோல் பங்க் ஆகிய பகுதிகளில் இரண்டாவது நாளாக மழைநீா் தேங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...