நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பூண்டி ஒன்றியத்தில் பள்ளிகள், அங்கன்வாடிகளை சீரமைக்க வலியுறுத்தல்

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சேதமடைந்த தொடக்கப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வலியுறுத்தி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சேதமடைந்த தொடக்கப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வலியுறுத்தி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றியக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் பி.வெங்கட்ரமணா தலைமை வகித்தாா். அதில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் மகாலட்சுமி மோதிலால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.கலைச்செல்வி, ஜி.மகேஷ்பாபு, மேலாளா் (நிா்வாகம்) பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பல்வேறு ஊராட்சிகளில் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க வேண்டும். அதேபோல், கடந்த 40 ஆண்டுகள் பழைமையான பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள பள்ளிக் கட்டடங்களை மற்றும் அங்கன்வாடி மையங்களின் கட்டடங்களை உதவி பொறியாளா்களின் ஆய்வறிக்கையின்படி, இடித்து அகற்ற வேண்டும். மழைக்கால சேதத்தை போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் வேண்டும் எனவும் ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.