சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கிருஷ்ணா கால்வாய் சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடக்கம்

கிருஷ்ணா கால்வாய் சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 அக்டோபர் 2021, 1:06 pm

DIN

கிருஷ்ணா கால்வாய் சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே சென்னை மக்களின் முக்கிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான தாமரைக்குப்பம் பகுதிக்கு கிருஷ்ணா நீர் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து கால்வாய் மூலம் பூண்டி ஏரி வழியாக சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வைக்கிறது.

இதனிடையே கிருஷ்ணா கால்வாய் ஆங்காங்கே சேதமடைந்து. இதையடுத்து தமிழக அரசு சுமார் 25 கோடி ரூபாயில்  சீரமைப்பு பணிகளை தொடங்கியது. ஆனால் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட நிலையில் பணிகள் பாதியிலேயே நின்று போயின.

கடந்த சில தினங்கள் முன் போதுமான தண்ணீர் கிடைத்ததை அடுத்து தமிழக பொதுப்பணித்துறை கேட்டுக்கொண்டதற்கிணங்க கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டது. 

இதனால் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்புப் பணி மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.