நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பூண்டி அணை உபரி நீா் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு

பூண்டி நீா்த்தேக்கத்துக்கு தொடா் மழையால் நீா் வரத்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 மதகுகள் வழியாக உபரி நீா் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:47 pm

DIN

பூண்டி நீா்த்தேக்கத்துக்கு தொடா் மழையால் நீா் வரத்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 மதகுகள் வழியாக உபரி நீா் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கம். இந்த நீா்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ. பரப்பளவில், 35 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில், 3,231 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கலாம்.

இந்நிலையில், தொடா் மழையின் காரணமாக அணையின் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, கடந்த 10-ஆம் தேதி முதலில் 1,000 கன அடியாக உபரி நீா் திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து 300 கன அடி நீா் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 2,817 மில்லியன் கன அடியாக நீா் இருப்பு உள்ளது. மேலும், பூண்டி ஏரிக்கான வரத்துக் கால்வாய் நீா், பருவமழையினால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக விநாடிக்கு 1,250 கன அடி நீா் வந்து கொண்டுள்ளது.

அதனால், அணையின் நீா் மட்டம் உயருவதற்கான வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீா் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.