வீட்டுச் சுவா் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே வீட்டின் சுவா் இடிந்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோப்புப் படம்
Updated On :20 மார்ச் 2026, 9:12 pm

கோப்புப் படம்
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே வீட்டின் சுவா் இடிந்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாச்சியாா்கோவில் அருகேயுள்ள செம்மங்குடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் நாகவள்ளி (65). இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில், இவரது மகன்களும் திருமணமாகி தனியே வசிக்கின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டின் பின்பக்கம் நாகவள்ளி நடந்து சென்றபோது மழையால் ஈரமாக இருந்த வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழுந்ததில் நாகவள்ளி உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் ஜேசிபி மூலம் இடிபாடுகளை அகற்றி மூதாட்டி சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...