புதுவாயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் 7 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் திறந
புதுவாயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்.
புதுவாயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்.

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் 7 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்தார். 
கும்மிடிப்பூண்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், விவசாயிகள் விளைவித்த நெல்லை இடைதரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதால், உரிய விலையின்றி விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தனது தேர்தல் வாக்குறுதியில் கும்மிடிப்பூண்டி விவசாயிகள் பயன்பெறும் வகையில் கும்மிடிப்பூண்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி தந்திருந்தார்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதிதியில் புதுவாயல், கீழ்முதலம்பேடு, மேல் முதலம்பேடு, தண்டலச்சேரி, கெட்ணமல்லி, ஏ.என்.குப்பம், பாலவாக்கம் ஆகிய 7 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். தொடர்ந்து இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் திறப்பு விழா புதுவாயலில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் சுமித்ரா, தரக் கட்டுப்பாடு துணை மேலாளர் மருதநாயகம், பருவகால பட்டியல் எழுத்தாளர் மோகன்ராஜ், துணை வேளாண் அலுவலர் அருள்முருகன், புதுவாயல் ஊராட்சித் தலைவர் அற்புதராணி சதீஷ்குமார், முன்னாள் ஊராட்சித் தலைவர் பிரபாகர், திமுக ஊராட்சி செயலாளர் சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகள் முன் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், புதுவாயல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 7 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 20 விவசாய கிராமங்கள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தால் பயன்பெற உள்ளன. இனி விவசாயிகள் அவர்கள் உற்பத்தி செய்த நெல்லை இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் இடைதரகர் விற்பனை செய்யலாம். 
தற்போது நெல்லின் ஈரப்பதத்தை பரிசோதித்த பிறகு 1 கிலோ நெல் 19.58 ரூபாயாக இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்றவர், கும்மிடிப்பூண்டியில் தொகுதியில் மேலும் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றியகவுன்சிலர் இந்திரா திருமலை, கீழ் முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம்,மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், பாஸ்கரன், அறிவழகன், பரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com