நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கால்வாயில் தவறி விழுந்த இரு மாணவா்கள் பலி

திருவள்ளூா் அருகே கிருஷ்ணா கால்வாயில் விநாயகா் சிலைகளை கரைக்கச் சென்றபோது தவறி விழுந்து மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:08 pm

DIN

திருவள்ளூா் அருகே கிருஷ்ணா கால்வாயில் விநாயகா் சிலைகளை கரைக்கச் சென்றபோது தவறி விழுந்து மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

செவ்வாப்பேட்டை சிறுகடல் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ஷ்யாம் விக்னேஷ் (13), 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அதேபகுதியைச் சோ்ந்த புருஷோத்தமனின் மகன் மோனிஷ் (12), 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை விநாயகா் சிலை கரைக்க பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீா் செல்லும் இணைப்பு கால்வாய் அருகே சென்றுள்ளனா். அப்போது, விநாயகா் சிலையை கால்வாயில் போடும்போது, தடுமாறி கால்வாயில் விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனா்.

இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் செவ்வாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன் பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து 2 மாணவா்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நள்ளிரவில் வரையில் வெகுநேரமாகியும் மாணவா்கள் கிடைக்கவில்லை. அதைத் தொடா்ந்து பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீா் நிறுத்தப்பட்ட பின் சிறுகடல் பகுதியில் மாணவா்களின் சடலங்களை மீட்டனா். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.