திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாள்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அருகே காக்களூரில் வாகன உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக ஒப்பந்த பணி செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு முறையாக ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பி.எஃப் தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் அதனால் அடிக்கடி நிறுவனத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது.
மேலும், இது குறித்து பெண் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் கேட்கும் போது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை முற்றுகையிட்டு, வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பிஎஃப் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிறுவனத்தை முற்றுகையிட்டு பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன், கிராமிய சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல் துறையினர் தொழிற்சாலைக்கு விரைந்து வந்து மனித வள மேலாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பாட்னா: படகில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி
இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



