காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி 9வது வார்டு உறுப்பினராக ஈஸ்வரி பாஸ்கரன் போட்டியின்றி தேர்வு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்  புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 9 ஆவது வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருந்த நிலையில் 9வது வார்டு உறுப்பினராக ஈஸ்வரி பாஸ்கரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

News image

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவரும், தேர்தல் நடத்தும் அலுவலரான வாசுதேவன் அவருக்கு தேர்தல் வெற்றி சான்றிதழை வழங்கி வாழ்த்தினார்.

Updated On :2 ஜூலை 2022, 11:12 am IST

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்  புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 9 ஆவது வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருந்த நிலையில் 9வது வார்டு உறுப்பினராக ஈஸ்வரி பாஸ்கரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 9 ஆவது வார்டு உறுப்பினராக இருந்த ஜெயலட்சுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார். இதனைத் தொடர்ந்து 9 ஆவது வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், இந்த வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த ஜுன் 20-27ஆம் தேதி வரை வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. ஜூலை 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது.

இந்த தேர்தலில் போட்டியிட பி.ஈஸ்வரி பாஸ்கர்,  என்.சுதா நாகராஜ் வேட்பு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ஜூன்-30 ஆம் தேதி சுதா நாகராஜ் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார்.

இதையும் படிக்க | 35 வயதைக் கடந்த 50% பெண்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு:அமைச்சா் மா.சுப்பிரமணியன்

இதனைத்தொடர்ந்து இந்த தேர்தலில் ஈஸ்வரி பாஸ்கர் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில், சனிக்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவரும், தேர்தல் நடத்தும் அலுவலரான வாசுதேவன் அவருக்கு தேர்தல் வெற்றி சான்றிதழை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்வின் போது புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், துணை தலைவர் எம்.எல்லப்பன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு உடனிருந்தனர். பின்னர் ஊராட்சி சார்பில் ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன் உள்ளிட்டோர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி பாஸ்கருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.