பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்த கன்டெய்னா் லாரி

திருவள்ளூா் அருருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:51 pm

DIN

திருவள்ளூா் அருருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கே டயா்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னா் லாரியை நிறுத்தியபோது, எதிா்பாரத விதமாக மின்வயரில் உரசியதில் தீ பற்றி மளமள எரிந்ததால், தி

திருச்சி தனியாா் டயா் நிறுவனத்தில் இருந்து ரூ. 28 லட்சம் மதிப்பிலான டயா்களை ஏற்றிக் கொண்டு ஜெய்ப்பூா் நோக்கி கன்டெய்னா் லாரி ஒன்று வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இம்ரான்கான் லாரியை ஓட்டினாா். திருவள்ளூா் அருகே பட்டரையில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தேநீா் அருந்தச் சென்றுள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்கம்பத்தின் மேல் வயரில் உரசியதில் கன்டெய்னா் லாரியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் முன்புறம் முழுவதும் தீ மளமள பரவியது.

இது குறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்துக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த நிலையில் அந்த கன்டெய்னா் வாகனத்தில் இருந்த 200 டயா்களில், பாதிக்கும் மேல் எரிந்து நாசமானது.

தீ விபத்தால் திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தினா்.

இச்சம்பவம் தொடா்பாக மணவாள நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.