திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிரதமர் மோடி 100% டிரம்ப்பின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார்! -ராகுல் காந்தி

அமெரிக்க அதிபரின் 100% கட்டுப்பாட்டின்கீழ் இருக்குமொரு இந்தியப் பிரதமர் - மோடி..

News image

ANI

Updated On :23 மார்ச் 2026, 5:08 pm IST

வதோதரா : பிரதமர் நரேந்திர மோடி நூறு சதவீதம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

குஜராத்தின் வதோதராவில் இன்று(மார்ச் 23) நடைபெற்ற பழங்குடியினர் பிரிவினருக்கான சிறப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: “’ஆதிவாசி’ என்ற சொல்லின் பொருள் ‘இந்தியாவின் நிஜ உரிமையாளர்கள்’ என்பதேயாகும். இங்குள்ள நீர்-வனம்-நிலம் உங்களுக்குச் சொந்தமானது.

ஆனால், ஆர்எஸ்எஸ்-பாஜக ‘வனவாசி’ என்ற புதியதொரு பெயரைக் கொண்டு வந்துள்ளது. அதன் அர்த்தம், நீங்கள் காடுகளில் மட்டுமே வசிப்பவர்கள் என்பதாகும். நீங்கள் நீர்-வனம்-நிலம் ஆகியவற்றின் உரிமையாளர்கள் இல்லை என்பதைக் குறிக்கிறது.

நரேந்திர மோடியும் பாஜகவினரும் ‘பிர்சா முண்டா’ உருவச்சிலை முன் கைகூப்பி நின்றுகொள்வார்கள். ஆனால் அதே மக்கள், பிர்சா முண்டா எந்தக் கொள்கைகளுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்து தியாகி ஆனாரோ அந்தச் சித்தாந்தங்களைத் தாக்கியும் பேசுவார்கள்.

பாஜக நீர், காடுகள், பழங்குடியினரின் நிலம் ஆகியவற்றை பறித்தபோது, அது வெறுமனே பிர்சா முண்டா மீதான தாக்குதல் மட்டுமல்ல, அரசமைப்பின் மீதான தாக்குதலும்கூட.

இன்று, வளர்ச்சி என்ற பெயரில், பழங்குடியினரின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதற்கான இழப்பீடு வழங்கப்படுவதேயில்லை. இந்த அரசைப் பொருத்தவரை, பழங்குடியின மக்களுக்கு எந்த உரிமைகளும் இல்லவேயில்லையாம்.

பிரதமர் 25 நிமிஷங்கள் மக்களவையில் பேசினார் என்று அறிகிறேன். ஆனால், நாடாளுமன்ற விவாதம் நடத்த முன்வர மாட்டார்கள்.

நரேந்திர மோடி தமது 25 நிமிஷ உரையில், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு சொல்லைக்கூட உச்சரிக்கவேயில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன். நரேந்திர மோடி நூறு சதவீதம் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்!

நான் எப்போதெல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றி பேசுகிறேனோ, பாஜக-ஆர்எஸ்எஸ் என்னைத் தாக்கிப் பேசுவார்கள். பொதுத்துறையில் பழங்குடியினர், தலித்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு ஒருகாலத்தில் இருந்தது.

ஆனால், இப்போது பாஜக அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்குகிறது. இதனால் அவற்றில் ஓரிரு குறிப்பிட்ட மக்களுக்கே இடம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது” என்றார்.

Summary

Narendra Modi is 100% under Trump's control : Leader of Opposition Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.