தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியைப் பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

தெலுங்கு நடிகர் தனிகெல்லா பரணியின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருவது குறித்து...

News image

பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகர் தனிகெல்லா பரணி - எக்ஸ்

Updated On :1 மணி நேரம் முன்பு

பகவான் ராமரையும், கிருஷ்ணரையும், விவேகானந்தரையும் பார்த்ததில்லை என்றும் அதற்கு பதிலாக அவர்களின் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பார்ப்பதாக தெலுங்கு நடிகர் தனிகெல்லா பரணி தெரிவித்துள்ளார்.

வாழும் காலத்தில் பிரதமர் மோடியை பார்ப்பதை பெரும் ஆசிர்வாதமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் தனிகெல்லா பரணி.

தமிழில் 180, தோழா, கம்பீரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளா. தமிழில் வெளியாகும் தெலுங்கு டப்பிங் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகமானவர்.

இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் பரணி சந்தித்துள்ளார். ஆன்மிகத்தில் ஈடுபாடுடைய இவர், மோடியுடன் சில நிமிடங்கள் பேசியுள்ளார்.

பின்னர் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரணி பகிர்ந்துள்ளதாவது:

"நான் ராமரைப் பார்த்ததில்லை; கிருஷ்ணனைப் பார்த்ததில்லை; ஆதி சங்கரரைப் பார்த்ததில்லை; விவேகானந்தரைப் பார்த்ததில்லை. சொல்லப் போனால், இப்போதும் நம்மால் அவர்களைக் காண இயலாது.

ஆனால், அவர்கள் அனைவரின் சாராம்சத்தையும் தன்னுள் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை நான் கண்டிருக்கிறேன். அவருடன் செலவிட்ட நேரங்கள் மறக்க முடியாதவை. என் வாழ்வு பூரணமடைந்தது" என்று பரணி குறிப்பிட்டார். இவரின் இந்த பதிவு இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

I have not seen Ram, Krishna but I have seen PM Narendra Modi Telugu actor Tanikella Bharani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.