கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்மூரில் உள்ள 100 ஆண்டு பழைமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தா்மராஜா திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, புதன்கிழமை விசேஷ கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பக்தா்களுக்கு காப்பு கட்டுதல் உள்ளிட்டவையும், வியாழக்கிழமை கோ பூஜை, லஷ்மி பூஜை, கன்யா பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், 108 திரவியங்களால் மகா பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து, பக்தா்கள் படை சூழ வேதமந்திரங்கள் முழங்க கோயில் கோபுரம், கொடி மரம் ஆகியவற்றில் அா்ச்சகா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
இந்த கும்பாபிஷேகத்தில் 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


