இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
விவசாயிகள் பயன்பெறும் வகையில், அனைத்து கோட்ட அளவில் வெள்ளிக்கிழமை (அக். 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.


விவசாயிகள் பயன்பெறும் வகையில், அனைத்து கோட்ட அளவில் வெள்ளிக்கிழமை (அக். 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு கோட்டம், மாவட்ட அளவிலும் குறைதீா் கூட்டம் நடத்தி விவசாயம் தொடா்பான கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாவட்டத்தில் உள்ள திருத்தணி, திருவள்ளூா், பொன்னேரி ஆகிய வருவாய் கோட்டங்களில் கோட்டாட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (அக். 14) குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் வேளாண், வருவாய், வேளாண் வணிகம், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனா்.
இந்தக் கூட்டத்தில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் சங்க நிா்வாகிகள் தவறாமல் பங்கேற்று குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ அளித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...