47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நண்பர் இறந்த துக்கத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே உடன் படித்த நண்பர் உயிரிழந்த துக்கத்தில் இருந்த கல்லூரி மாணவர் புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
நண்பர்கள் உதயகுமார் மற்றும் மில்டன்
Updated On :5 ஜனவரி 2022, 5:58 am

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உடன் படித்த நண்பர் உயிரிழந்த துக்கத்தில் இருந்த கல்லூரி மாணவர் புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த பாசூரான் மகன்  மில்டன் என்கிற அப்பு (17). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் தன்னுடன் 11-ஆம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அரக்கோணம் அருகே புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த உயிர் நண்பன் உதயகுமார்(17). இவர்கள் இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்கள். இந்த நிலையில் கடந்த மாதம் 5-ஆம் தேதி அன்று உயிரிழந்தாராம்.

  அன்றைய நாள் முதல் நண்பன் இறந்த வருத்தத்தில் மில்டன்  இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நண்பனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில நாள்களுக்கு முன்பாக மில்டன் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர்.

அதையடுத்து பெற்றோர்கள் மில்டனை சமரசம் செய்து வந்தனர். இந்த நிலையில் நாள்தோறும் அதையே நினைத்து விரக்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது நண்பர் இறந்து போன 5-ஆம் தேதி தேதி அன்றே தானும் இறக்க முடிவு செய்து புதன்கிழமை அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு கொண்டாராம்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனே மில்டனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவவமனைக்கு கொண்டு சென்று சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நண்பர் இறந்த துக்கம் தாளாமல், கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.